சென்னை ராயபுரம் கல்மண்டபம் பஸ் நிறுத்தம் அருகில் கழிப்பறை ஒன்று பராமரிப்பின்றி அலங்கோலமாக காட்சியளிக்கிறது. இதிலிருந்து துர்நாற்றம் அதிகளவு வீசுவதால் பஸ் ஏறும் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பள்ளி செல்லும் குழந்தைகளும் மூக்கை பொத்திக்கொண்டு செல்லும் நிலையுள்ளது. கழிப்பறை பராமரிக்கப்படுமா?