வில்லியனூர் மெயின் ரோட்டில் சாலையின் இரு புறமும் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மிகவும் ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வருவதால் அப்பகுதியில் கடை வைத்திருக்கும் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். எனவே, போர்க்கால அடிப்படையில் பணியை முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.