கொரடாச்சேரியில் வடக்குமாங்குடி தெருவில் உள்ள மின்கம்பத்தை சுற்றி கருவேலமரங்கள் உள்ளன. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது. மேலும் அருகில் வீடுகள் இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். .எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து கருவேலமரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், கொரடாச்சேரி.