பட்ட மரத்தை அகற்ற வேண்டும்

Update: 2022-08-28 11:46 GMT

கோதநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட முட்டைக்காடு குருசடி பகுதியில் புத்தன் ஆறு சானல் கரையோரம் அயனி மரம் பட்ட நிலையில் நிற்கிறது. இந்த பாதையை அப்பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். மேலும் குடியிருப்புகளும் உள்ளன. பட்ட மரத்தில் அவ்வப்போது கிளைகள் முறிந்து விழுகின்றன. எப்போது வேண்டுமானாலும் மரம் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பட்ட மரத்தை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்