ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடகீரனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்பு கழிவுநீருடன் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் மாணவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.