சமூக விரோதிகள் அட்டகாசம்
சேவூர் புளியம்பட்டி சாலையில் முறியாண்டம்பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் சிறுவர்-சிறுமிகள் விளையாட்டு மைதானமாகவும், வாலிபால், கால்பந்து பயிற்சியும், பொதுமக்கள் நடைப்பயிற்சியும் மேற்கொண்டு வருகின்றனர். மைதானம் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் சமூகவிரோதிகள், குடிபோதை ஆசாமிகள் குடித்துவிட்டு பாட்டில்களை உடைத்து எறிந்து விட்டுச் செல்கின்றனர். மேலும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள், கேரிபேக், தின்பண்டங்கள் மைதானம் முழுவதும் சிதறி போட்டு விட்டு செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகின்றது. எனவே அரசு அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அரிகரன், சேவூர் 85080 48548: