கரூர் மாவட்டம், சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலை மூலிமங்கலம் பிரிவு எதிரே உள்ள தார்சாலை அருகில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தார்சாலை ஓரத்தில் டாஸ்மாக் உள்ளதால் மதுப்பிரியர்கள் மது பாட்டில்களை வாங்கி வந்து சாலையோரம் அமர்ந்து மதுவை அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்துவிட்டு செல்கின்றனர். மேலும், இரவு நேரங்களில் அந்த வழியாக பெண்கள் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் மதுபான கடைகள் செயல்படக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு இருந்தும் இங்கு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. எனவே, இதுகுறித்து மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த டாஸ்மாக் கடையை அகற்றி, வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.