திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா திருவெள்ளறை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் இந்த பள்ளிக்கென்று தனியாக விளையாட்டு மைதானம் இல்லாமல் இருப்பதால் மாணவர்கள் விளையாட சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.