வேடசந்தூரில், பழனி சாலையில் இருபுறமும் முறையாக வடிகால் வசதி இல்லாததால், மழைக்காலங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. மேலும் சாலையையும் ஆக்கிரமித்தபடி மழைநீர் தேங்குகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையின் இருபுறமும் வடிகால் வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.