திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே பனங்காட்டாங்குடி பாசன வாய்க்காலில் சாக்கடை தண்ணீர் அதிகளவில் தேங்கி நிற்கிறது. கழிவு பொருட்கள் அதில் கொட்டப்படுவதால் அப்பகுதியில் அதிகமாக துர்நாற்றம் வீசுகிறது. இதனால், கடைவீதியில் சென்று வருவோர் மிகவும் சிரமம் அடைகின்றனர். இதனால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவு நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.,
பொது மக்கள், . கூத்தாநல்லூர்,.