நோயாளிகள் அவதி

Update: 2022-08-27 13:00 GMT

ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கிறார்கள். இங்கு நேற்று நுண்கதிர் பிரிவுக்கு (எக்ஸ்ரே) நோயாளிகள் சென்றனர். ஆனால் அந்த நுண்கதிர் பிரிவின் அறை கதவு பூட்டப்பட்டு கிடந்தது. நீண்ட நேரமாக திறக்கவில்லை. இதுகுறித்து அங்கிருந்த டாக்டர்களிடம் கேட்டபோது, எக்ஸ்ரே பணியாளர் விடுமுறையில் உள்ளார் என்று தெரிவித்துள்ளனர். இதனால் எக்ஸ்ரே எடுக்க வந்த நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் அவலம் உள்ளது. ஆகவே அங்கு பணியாளர் விடுமுைற எடுக்கும் போது மாற்று பணியாளர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்