கூடுதல் வாகனம் நிறுத்தும் இடம் தேவை

Update: 2022-08-27 09:48 GMT
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் மனு அளிக்க வரும் பொதுமக்கள் பெரும்பாலும் இருசக்கர வாகனங்களில் வருகின்றனர், ஆனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாகனம் நிறுத்தும் இடம் போதுமான அளவிற்கு இல்லை. இதனால் அங்கு இருசக்கர வாகனங்களை தாறுமாறாக சிலர் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் வீண் தகராறு ஏற்படுகிறது. மேலும் வாகனங்கள் திருடு போகும் அபாயமும் உருவாகியுள்ளது. இது தவிர வெயிலில் நிற்பதால் சில நேரங்களில் வாகனங்களின் டயர்கள் பழுதாகி விடுகின்றன. இதை தவிர்க்க அலுவலகத்தில் கூடுதல் வாகனம் நிறுத்தும் இடம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்