தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி மெயின்ரோடு 7-வது வார்டில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. அந்த தெருநாய்கள் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள், பள்ளி செல்லும் மாணவர்களை துரத்தி செல்கிறது. இதனால் அந்த பகுதியில் நடந்து செல்லவே அச்சப்படுகிறார்கள். பொதுமக்கள் பாதுகாப்பு கருதி தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அன்பில் சீனி, மாரண்டஅள்ளி, தர்மபுரி.