மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் திருமுல்லைவாசல் ஊராட்சி பகுதிகளில் உள்ள கடைகள் சாலையை ஆக்கிரமத்துள்ளன. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் கடைக்கு வரும் பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களை சாலையின் இருபுறமும் நிறுத்தி விடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் திருமுல்லைவாசல்.