விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக, சுற்றி திரிகின்றன இவைகள் அங்கு கிடைக்கும் குப்பைகளில் மேய்வதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. கலெக்டர் அலுவலகத்திலேயே பன்றிகள் நாலா பக்கமும் சுற்றி வருவது பொது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.