சிதம்பரம் வண்டிக்கேட்டில் இருந்து சி.முட்லூர் வழியாக கடலூர் செல்லும் புறவழிச்சாலையில் வாகனங்கள் அதிவேகமாகவும், தாறுமாறாகவும் செல்கின்றன. இதனால் அப்பகுதியில் சாலையை கடக்க பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே புறவழிச்சாலையில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.