கூத்தாநல்லூரில் உள்ள லெட்சுமாங்குடி சாலை திருவாரூர்-மன்னார்குடி,நாகப்பட்டினம்-தஞ்சாவூர் போன்ற நகர பகுதிகளின் வழித்தடமாக அமைந்துள்ளது. இதனால், பகல் நேரங்கள் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்கின்றன. குறிப்பாக, இரவு நேரங்களில் சென்னை செல்லும் பஸ்கள் அதிகமாக செல்கிறது. இந்த நிலையில் லெட்சுமாங்குடி சாலையில் ஏராளமான மாடுகள் சாலையில் சுற்றி திரிகிறது. இதனால், கண் இமைக்கும் நேரத்தில் வாகன விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, இரவு நேரங்களில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொது மக்கள், கூத்தாநல்லூர்.