ரிஷிவந்தியம் அருகே ஈருடையாம்பட்டு மங்களம் கிழக்கு தெருவில் ஆழ்துளை கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணறு தற்போது திறந்து கிடக்கிறது. இதனால் அதில் குழந்தைகள் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?.