பயணிகள் நிழற்கூடம் இல்லையே!

Update: 2022-08-25 16:23 GMT

தூத்துக்குடி 48, 49-வது வார்டுக்கு உட்பட்ட முருகன் கோவில் தெரு, கால்டுவெல் காலனி, சத்யா நகர், அஞ்சல் அலுவலர் குடியிருப்பு உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த மக்கள் வெளியூர் செல்வதற்கு தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோட்டில் மகளிர் கல்லூரி அருகில் உள்ள பயணிகள் நிழற்கூடம் சென்று பஸ் ஏறுவார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சாலை விரிவாக்கத்துக்காக பயணிகள் நிழற்கூடத்ைத இடித்து அகற்றினர். அதன்பின்னர் புதிய நிழற்கூடம் அமைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறிச்செல்கிறார்கள். எனவே புதிய நிழற்கூடம் அமைக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்