திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் குடவாசல் ஒன்றியம் நெம்மேலி கிராம ஊராட்சியில் நெம்மேலி. கல்லுக்குடி. குச்சிப்பாளையம். நரிக்குடி. திடல் தெரு களப்பாலிருப்பு மற்றும் மான்கண்டமூலை ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த நிலையில் நெம்மேலியில் ரேஷன் கடை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு ஏழு வருடங்கள் கடந்த நிலையில் இதுநாள்வரை திறப்பு விழா காணாமல் பூட்டியே இருந்து வருகிறது.எனவே இனியும் காலம் கடத்தாது உடனடியாக மக்கள் பயன் பெறும் வகையில் ரேஷன் கடையை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் நெம்மேலி