பொள்ளாச்சியில் இருந்து கோவை, பழனி, திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, ஈரோடு உள்பட பல்வேறு ஊர்களுக்கு அரசு பஸ்கள் செல்கின்றன. இந்த பஸ்களில் முதலுதவி பெட்டிகள் இருக்கின்றன. ஆனால் அதில் மருந்து பொருட்கள் இல்லாமல் வெறுமையாக உள்ளது. இதனால் விபத்து ஏற்படும்போது பயணிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து உதவ முடியாத நிலை உள்ளது. எனவே பஸ்களை ஆய்வு செய்யும் அதிகாரிகள், முதலுதவி பெட்டிகளில் மருந்து பொருட்கள் உள்ளதா? என்றும் ஆய்வு செய்ய முன்வர வேண்டும்.