ஈரோடு நாடார்மேடு அண்ணமார் பெட்ரோல் பங்க் பஸ் நிறுத்தம் பகுதியில் மழை பெய்யும்போது குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சுமார் அரை மணிநேரம் மழை பெய்தாலே 3 மணிநேரத்துக்கு தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்கும். இதனால் பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே அங்கு மழைநீர் வடிகால் வசதி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.