பூதப்பாண்டி அருகே காட்டுப்புதூர் பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்தில் இரவு கடைசியாக வரும் 2 அரசு பஸ்கள் அங்கியே நிறுத்தப்பட்டு அதிகாலையில் மீண்டும் இயக்கப்படுகிறது. ஆனால், இந்த பஸ் நிலையத்தில் கழிப்பறை வசதி இல்லை. இதனால், பஸ்சில் தங்கும் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, டிரைவர்கள், கண்டக்டர்கள் நலன் கருதி பஸ் நிலையத்தில் கழிப்பறை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சு.மதன், காட்டுப்புதூர்.