அவசியம் தேவை நூலகம்

Update: 2022-08-24 14:59 GMT

சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியம் கச்சராயனூரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கச்சராயனூர் கிராமத்தை சுற்றி உள்ள ஊஞ்சக்காடு, கெண்டிநகர், வெள்ளாட்டுகாரனூர், மூக்கரையன்காடு, மோட்டூர், ஆரிக்கவுண்டனூர், கரும்பூசாலியூர் ஆகிய பகுதிகளில் வசித்து வரும் ஏராளமான மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் போட்டி தேர்வில் பங்கேற்கவும், பொது அறிவை வளர்த்துக்கொள்ளவும் அந்த பகுதியில் நூலகம் அமைக்கப்படவில்லை. எனவே மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு கச்சராயனூரில் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுந்தரராஜன், கச்சராயனூர், சேலம்.

மேலும் செய்திகள்