திருவாரூரில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு திருவாரூர் மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆனால் கோவில் வந்து செல்வோர் பயன்படுத்துவதற்கு கழிவறை, குளியலறை வசதிகள் இல்லை. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கோவிலுக்கு அருகே பொதுமக்களின் வசதிக்காக குளியலறை, கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
-பொதுமக்கள் திருவாரூர்