சாலையின் நடுவே ஆபத்தான பள்ளம்

Update: 2022-08-24 14:53 GMT


மயிலாடுதுறையில் சின்ன மாரியம்மன் கோவில் தெரு உள்ளது. இந்த தெருவில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பள்ளி, கல்லூரிகளும் உள்ளன. இதனால் இந்த தெருவின் வழியாக நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர். இந்த தெருவில் உள்ள சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதாள சாக்கடை மூடி உடைந்து அபாய பள்ளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் தவறி விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடை மூடியை சிரமைக்கவேண்டும்.

-பொதுமக்கள்,மயிலாடுதுறை

மேலும் செய்திகள்