பெங்களூரு பன்னரகட்டா பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. சாலையில் குறுக்கே அங்கும், இங்குமாக செல்லும் மாடுகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கொள்ளும் அபாயமும் உள்ளது. மேலும் சாலையின் குறுக்கே மாடுகளால் படுத்து கொள்வதால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து கோசாலையில் விட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?