குமாரபுரம் பேரூராட்சிக்கு உள்பட்ட அன்னிக்குளத்தில் இருந்து படப்பகுளம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஒரு நீரோடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீரோடையில் சிலர் குப்பைகள், இறைச்சி கழிவுகள், இறந்து போன நாய், மாடு உள்ளிட்ட விலங்குகளின் உடல்களை வீசிச் செல்கின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தண்ணீர் மாசுபடுவதுடன், துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஓடையில் உள்ள கழிவுகளை அகற்றுவதுடன், அவற்றை கொட்டுபவர்கள் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மேசியா, குமாரபுரம்.