திக்கணங்கோடு தபால் நிலையத்துக்கு உட்பட்ட மத்திகோடு சந்திப்பு உள்ளது. இந்த பகுதியில் உள்ள ஒரு கடையின் சுவற்றில் தபால் பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. இதனால், மத்திகோடு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பல கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால், தற்போது தபால் பெட்டி அகற்றப்பட்டுள்ளது. இதனால், மத்திகோடு கிராம மக்கள் தபால்களை அனுப்புவதற்கு திக்கணங்ேகாடு அல்லது கருங்கல் தபால் நிலையங்களுக்கு செல்ல வேண்டி உள்ளதால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி மத்திகோடு பகுதியில் மீண்டும் தபால் பெட்டி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்க எடுக்க வேண்டும்.
-எட்வின் ஜோஸ், மத்திகோடு