நடைபாதை வேண்டும்

Update: 2022-08-24 09:56 GMT

கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலையில் பெரியார் நகரில் 10-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நடைபாதையை நெடுஞ்சாலைத்துறையினர் தடுப்புச்சுவர் கட்டுவதற்காக அகற்றினர். ஆனால் அதன்பிறகு குடியிருப்புகளுக்கு செல்ல நடைபாதை அமைத்து தரவில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே அங்கு நடைபாதை அமைத்து தர வேண்டும். இல்லையென்றால் செங்குத்தான பகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்ல படிக்கட்டுகளாவது அமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்