புகார் பெட்டி செய்தி எதிரொலி

Update: 2022-08-23 16:17 GMT

தூத்துக்குடி மாவட்டம் தெற்கு திட்டங்குளம் வழியாக தூத்துக்குடி-கோவில்பட்டி நெடுஞ்சாலை செல்கிறது. கோவில்பட்டி-தெற்கு திட்டங்குளம் வரை நான்கு வழிச்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையின் முடிவில் வேகத்தடை உள்ளது. இதன் அருகில் இருந்த மின்விளக்கை அகற்றி இருந்தனர். இதுகுறித்து `தினத்தந்தி' புகார் பெட்டியில் வாசகர் விஜயகுமார் அனுப்பிய பதிவு பிரசுரம் ஆனது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மீண்டும் மின்விளக்கை பொருத்தி உள்ளனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த `தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்