திருவாரூர் மாவட்டம் ,புலிவலம் பெருமாள் கோவில் எதிரில் அரசுமேல்நிலைப்பள்ளி உள்ளது.காட்டாத்துப்பாலம் அன்னுக்குடி, கூத்தங்குடி, மொசக்குளம், கிராமத்திலிருந்து பத்துக்கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தில் மழையிலும், வெயிலிலும் நடந்தே வருகின்றனர். பஸ் வசதி இல்லாததால் விவசாயிகள், மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், புலிவலம்.