கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

Update: 2022-08-23 11:02 GMT

தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் மேலத்திருவிழாப்பட்டி கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இதனால் அந்த பகுதி விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறிவருகிறது. மேலும் கருவேல மரங்கள் அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதை தடுத்து நிறுத்துகின்றன. குறிப்பாக ஏரிக்கரையில் கருவேல மரங்கள் அதிகளவில் படர்ந்து விரிந்து வளர்ந்துள்ளன. இதன்காரணமாக மதுப்பிரியர்கள் அதிகளவில் அந்த பகுதியில் அமர்ந்து மது அருந்துவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்