தர்மபுரி- திருப்பத்தூர் சாலையில் மதிகோன்பாளையத்தையொட்டி ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் அதிகளவில் கருவேல முட் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதன் காரணமாக அதிக அளவில் மழை பெய்த போதும் ஏரியில் மழைநீர் குறிப்பிடத்தக்க அளவில் தேங்கவில்லை. இதற்கு தீர்வு காண ஏரியில் அடர்ந்து வளர்ந்துள்ள முட் செடிகளை வெட்டி அகற்ற வேண்டும். மேலும் இந்த ஏரிக்கு மழைநீர் வரும் கால்வாய்களையும் தூர் வார வேண்டும்.