கிருஷ்ணகிரியில் இருந்து மகராஜகடை செல்லும் சாலையில் இரவு நேரங்களில் இறைச்சி கழிவுகளை மூட்டைகளில் கட்டப்பட்டு சாலையோரத்தில் சிலர் வீசி வருகின்றனர். இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் துர்நாற்றத்தால் அவதி அடைகின்றனர். மேலும் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் அதிகளவில் கொட்டப்படுகிறது. எனவே சாலையோரத்தில் கழிவுகளை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.