கரூர் மாவட்டம், நொய்யல் அருகே நொய்யல் -வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் இருந்து கவுண்டன்புதூர் செல்லும் பிரிவு சாலை அருகே செல்வநகர் பகுதியை சேர்ந்தவர்களின் நலன் கருதி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சுடுகாடு கட்டப்பட்டது. இந்த சுடுகாட்டில் அப்பகுதியில் இறந்தவர்களை புதைத்தும், எரித்தும் வந்தனர். இந்நிலையில் பல்வேறு செடி, கொடிகள் முளைத்ததன் காரணமாக இப்பகுதியில் இறந்தவர்களை புதைக்கவும், எரிக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது .எனவே உள்ளாட்சித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சுடுகாட்டில் முளைத்துள்ள செடி, கொடிகளை அகற்றி இறந்தவர்களை புதைப்பதற்கும், எரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.