கரூர் மாவட்டம், வாங்கல் பகுதியில் இருந்து மண்மங்கலம் செல்லும் சாலையில் ரெயில்வே பாதையின் குறுக்கே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் வழியாக ஏராளமான லாரிகள், கார்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள் என சென்று வருகின்றன. ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் மேம்பாலத்தில் காங்கிரீட்டுகள் சிதலடைந்து இருசக்கர வாகனங்கள் நிலை தடுமாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.