தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலைக்கார தெருவில் மின்கம்பம் சேதம் அடைந்து இருந்தது. இதுபற்றி `தினத்தந்தி' புகார் பெட்டிக்கு பாலமுருகன் என்பவர் அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரம் ஆனது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரமைத்துள்ளனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த `தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.