நெல்லை மாநகர பகுதியில் பாளையங்கால்வாய் ஓடுகிறது. இந்த கால்வாய் மூலம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் இந்த கால்வாயில் தண்ணீர் செல்வதால் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் உள்ள ஆழ்குழாய் கிணறு மற்றும் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது. ஆனால் இந்த கால்வாய் தற்போது அமலைச்செடிகள் நிறைந்து தண்ணீர் செல்ல முடியாத அளவிற்கு ஆங்காங்கே மோசமாக கிடக்கிறது. பல இடங்களில் கழிவுநீர் இந்த கால்வாயில் கலக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கால்வாய் பகுதியில் சில இடங்களில் துர்நாற்றம் வீசுகிறது. உடனே சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.