நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் கோத்தகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் வனவிலங்குகளுக்கு சுற்றுலா பயணிகள் சமவெளிப் பகுதியில் இருந்து கொண்டு வரும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவு பொருள்களை வழங்குகின்றனர். இதனால் அவற்றின் உணவு சங்கிலியில் மாற்றம் ஏற்பட்டு குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகள் பெரும்பாலும் தற்போது சாலையில் சுற்றி தெரிகின்றன. சாலையோரம் ஏதேனும் வாகனங்களை நிறுத்தினால் கூட தங்களுக்கு ஏதாவது கிடைக்கிறதா என்று குரங்குகள் ஏங்கி நிற்கின்றன. எனவே வனவிலங்குகளுக்கு சுற்றுலா பயணிகள் உணவுகள் கொடுப்பதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.