வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 24-வது வார்டு பெரிய காலனியில் நகராட்சி குப்பைகளை அகற்றும் பணியாளர்கள் ஒரு வாரமாக குப்பைகளை அகற்றவில்லை. இதனால் மாடுகள் மற்றும் நாய்கள் குப்பைகளை கிளறி விடுவதால் குப்பைகள் பறந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அந்தப் பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குப்பைகளை தினமும் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-அம்பிகா மேகநாதன், 23-வது வார்டு கவுன்சிலர், வந்தவாசி.