கண்ணமங்கலம் அடுத்த படவேடு பகுதியில் நேற்று முன்தினம் ஆடிவெள்ளி விழா நடந்தது. அதையொட்டி கோவிலுக்கு செல்லும் பஜார் சாலையோரம் தற்காலிக கடைகளான மக்காச்சோளம், கரும்புச்சாறு, பேன்சி ஸ்டோர்ஸ் மற்றும் தள்ளுவண்டி கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. எனினும், ஆங்காங்கே குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றுமா?
பரசுராமன், படவேடு