திருப்பத்தூர் டவுன் கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் பாஞ்சாலி மைதானம் உள்ளது. இங்கு சில்லறை காய்கறி கடைகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மைதானத்தில் மலை போல் குவித்து வைத்து வைக்கப்பட்டுள்ளது. இதை அப்புறப்படுத்தாததால் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளது. நகராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமா?
-கே.வி.ராஜேந்திரன், கவுன்சிலர், திருப்பத்தூர் நகராட்சி.