குப்பைகளை அகற்றுவார்களா?

Update: 2022-09-02 16:26 GMT

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் முக்கிய பகுதிகளில் எங்குப் பார்த்தாலும் குப்பை மேடாக காட்சி அளிக்கிறது. நகராட்சி சார்பில் சரியாக குப்பைகளை அகற்றுவது கிடையாது. தற்போது மழை பெய்து வருவதால் குப்பைகள் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசிகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. நகராட்சி நிர்வாக குப்பைகளை சரிவர அள்ளவில்லை என பொதுமக்கள் கூறுகிறார்கள். நகராட்சி நிர்வாகம் அனைத்துப் பகுதிகளிலும் தேங்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமா?

-சண்முகம், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்