அரக்கோணம்-சோளிங்கர் ரோடு மற்றும் திருத்தணி ரோட்டில் உள்ள ரெயில்வே மேம்பாலங்களில் மண் மற்றும் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்லும் போது மண் துகள், குப்பைகள் பறந்து வந்து கண்களில் விழுகிறது. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் மேம்பாலங்களில் உள்ள மண் மற்றும் குப்பைகளை அகற்றுவார்களா?
-டில்லிபாபு, சமூக ஆர்வலர், அரக்கோணம்.