குப்பைத்தொட்டிகள் வைக்கப்படுமா?

Update: 2024-06-30 19:58 GMT

வாலாஜா நகராட்சியில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள திருமண மண்டபங்களுக்கு முன்பு நடைபாதைகளிலும், அதையொட்டி உள்ள சாலைகளிலும் எச்சில் இலைகளை பகிரங்கமாக இரவிலும் பகலிலும் வீசி எறிகின்றனர். இதனால் அந்த வழியே வரும் மாடுகள், நாய்கள், பன்றிகள் எச்சில் இலைகளை சாப்பிடுகின்றன. இதனால் அந்த வழியே வரும் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் அச்சப்படுகின்றனர். விபத்துக்களும் நடக்கின்றன. திருமண மண்டபங்கள் முன்பு குப்பைகள், எச்சில் இலைகளை சேகரிக்க குப்பைத் தொட்டிகள் வைக்கப்படுமா?

-ரமேஷ்குமார், வாலாஜா. 

மேலும் செய்திகள்