குப்பைத்தொட்டிகள் வைக்கப்படுமா?

Update: 2024-03-03 17:20 GMT

வேலூர் கோட்டை மைதான பூங்காவில் ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் ஏராளமான மக்கள் ஓய்வெடுக்கின்றனர். அங்கு விற்கும் தின்பண்டங்களை வாங்கி சாப்பிட்டு விட்டு பேப்பர், பிளாஸ்டிக் பொருட்களை பூங்காவிலேயே வீசுகின்றனர். இதனால் பூங்காவில் ஏராளமான குப்பைகள் குவிகிறது. துப்புரவு ஊழியர்கள் சுத்தம் செய்ய சிரமப்படுகின்றனர். கோட்டை பூங்காவில் குப்பைத்தொட்டிகள் வைப்பார்களா?

-கு.விக்னேஷ், சிறுகளம்பூர். 

மேலும் செய்திகள்