வேலூர் மாநகராட்சியில் தெருக்களில் உள்ள சிறிய கால்வாய்களை மாநகராட்சி தூய்மை பணியாளர்களால் அவ்வபோது சுத்தம் செய்யப்படுகிறது. அவ்வாறு கால்வாயில் இருந்து தூர்வாரப்படும் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் கால்வாய் அருகில் போட்டுவிட்டு 2, 3 நாட்களில் தூய்மைப் பணியாளர்கள் வாகனங்களில் வந்து எடுத்துச் செல்வர். ஆனால் சமீப காலமாக மாநகராட்சி வார்டு எண்:4-ல் செங்குட்டை மாரியம்மன் கோவில் தெருவில் வாரப்பட்ட குப்பைகள் 20 நாட்கள் ஆகியும் அகற்றப்படாமல் அப்படியே உள்ளது. இதனால் மீண்டும் இந்த குப்பைகள் கால்வாயில் போய் நிரம்பி வருகிறது. குப்பைகளை கால்வாயில் இருந்து அகற்றினால் 2, 3 நாட்களில் அதை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சுதாகர், செங்குட்டை.