குப்பைக்கழிவுகள் அகற்றப்படுமா?

Update: 2023-09-10 11:28 GMT

வேலூர் பழைய அரசு மருத்துவமனை அருகில் இருந்து ஓல்டு டவுன் செல்லும் லால் சிங் குமணன் தெருவில், கடந்த மாதம் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு தெருவில் கழிவுநீர் குளம் போல் தேங்கியது. மாநகராட்சி ஊழியர்கள் அடைப்பை சரி செய்ய கால்வாயில் இருந்து அகற்றப்பட்ட கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் தெருவிலேயே கொட்டி வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சுகாதாரச் கேடு ஏற்படுவதுடன் மீண்டும் கால்வாயில் கழிவுகள் சரிந்து விழும் நிலை உள்ளது. குப்பைக்கழிவுகளை அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கிருஷ்ணமூர்த்தி, வேலூர்.

மேலும் செய்திகள்