கே.வி.குப்பம்-மேல்மாயில் ரோடு குறிஞ்சி நகர் பகுதியில் இருந்து வரும் தரம் பிரிக்காத பிளாஸ்டிக் குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் குளத்தில் கொட்டி வருகிறது. இதனால் அப்பகுதியே சுகாதாரச் சீர்கேடு நிறைந்த பகுதியாக மாறி வருகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக குப்பைகளை கொட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நடன சிகாமணி, கே.வி.குப்பம்.